×

பெரம்பலூருக்கு ரயில் போக்குவரத்து திட்டம்: கே.என்.அருண்நேரு பேட்டி

 

பெரம்பலுருக்கு ரயில் போக்குவரத்துத் திட்டம், வேலை வாய்ப்பினை ஏற்படுத்தும் தொழிற் சாலைகள் கொண்டுவர நட வடிக்கை எடுக்கப்படும் என்று வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் கே.என்.அருண் நேரு கூறினார். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் வெற்றிப்பெற்ற திமுக வேட்பாளர் அருண்நேரு நிருபர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது : எனக்கு விழுந்த ஓட்டுக்கள் தலைவரின் நலத்திட்டங்க ளுக்கும், கருப்பு சிவப்பு சின்னத்திற்கும் விழுந்த ஓட்டுக்கள்.வேலைவாய்ப்பு, விவசாயம், ரயில் திட்டம் போன்ற திட்டங்களை முத லில் நிறைவேற்றிடுவேன்.

குறிப்பாக நீண்ட நாள் கோரிக்கையான பெரம்ப லூருக்கு ரயில் திட்டத்தை கொண்டுவர முயற்சி செய்வேன். வேளாண் பயிர் சாகுபடி ஊக்குவிப்பதற்காக தேவையான திட்டங்கள் கொண்டு வரப்படும் அளிக்கப்படும் ரயில் போக்குவரத்து திட்டம் கொண்டுவரப்பட்டால் வேலைவாய்ப்பு ஏற்படுத்தக்கூடிய விவசாயம் சார்ந்த நிலங்கள் அதிகம் இருப்பதால் புதிதாக தொழிற்சாலைகள் கொண்டு வரும் திட்டமும் நிறைவேற்றப்படும்.

வெற்றி என்பது முதல் படி தான் இதற்கு பின்னர் செய்யக்கூடிய பணிகள் தான் அதிகம் உள்ளது வாக்களித்த திமுகவினர் மட்டுமன்றி அனைத்து தரப்பினருக்கும் நன்றி களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த தமிழக முதல்வ ருக்கு நன்றிகளை தெரி வித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

The post பெரம்பலூருக்கு ரயில் போக்குவரத்து திட்டம்: கே.என்.அருண்நேரு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Perambalur ,KN Arunneru ,DMK ,KN Arun Nehru ,Arun Nehru ,Perambalur Parliamentary Constituency ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட தாலுகாக்களில்...