×

காரைக்காலில் திமுக சார்பில் கலைஞர் 101வது பிறந்தநாள் கொண்டாட்டம்

 

காரைக்கால், ஜூன் 5: காரைக்காலில் திமுக சார்பில் மறைந்து முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி 101- வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக தலைமை அலுவலகமான கலைஞர் அகத்திலும்,மாவட்டத்தின் பிரதான பகுதிகளில் கலைஞர் கருணாநிதி உருவ படத்திற்கு புதுச்சேரி மாநில கழக அமைப்பாளர் நாஜிம் எம்.எல்.ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் நாக.தியாகராஜன் எம்.எல்.ஏ, தொகுதி செயலாளர் தமிமுன் அன்சாரி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கிய எம்.எல்.ஏ க்கள் நாஜிம்,நாக தியாகராஜன் ஆகியோர் அதனை தொடர்ந்து முதியோர் இல்லங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post காரைக்காலில் திமுக சார்பில் கலைஞர் 101வது பிறந்தநாள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Karaikal ,Tamil Nadu ,Chief Minister ,Kalain Karunanidhi ,Kalainar Agam and Puducherry ,
× RELATED தஞ்சையில் புதுமனை புகுவிழாவுக்கு...