×

காங்கிரஸ் வேட்பாளரைவிட சொந்த வார்டில் அதிமுக வேட்பாளர் 301 வாக்குகள் குறைவு

 

கரூர், ஜூன் 5: கரூர் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் தங்கவேல் தனது சொந்த வார்டு பகுதியில் 301 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார். பற்றி விவரம் வருமாறு பாராளுமன்ற தொகுதியில் கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக எல். தங்கவேல், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி , பாஜக வேட்பாளர் செந்தில்நாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் கருப்பையா மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட 54 பேர் போட்டியிட்டனர். வேட்பாளர் தங்கவேல் 26 வது வார்டு பகுதியில் வசிப்பவர். பகுதியில் காமராஜபுரம் செங்குந்தபுரம் காமராஜபுரம் வடக்கு ஆகிய பகுதிகள் அடங்கும்.

இப்பகுதியில் மொத்தமுள்ள ஐந்து பூத்துகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 1182 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தங்கவேல் 881 வாக்குகள் பெற்றார். பாஜ வேட்பாளர் செந்தில்நாதன் 560 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் கருப்பையா 199 வாக்குகள் பெற்றார். தனது சொந்த வார்டு பகுதியில் அதிமுக தங்கவேல் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை விட 301 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கரூர் மாநகராட்சி பகுதியில் எதிர்பார்த்ததை விட பாஜக வேட்பாளருக்கு கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளது.

The post காங்கிரஸ் வேட்பாளரைவிட சொந்த வார்டில் அதிமுக வேட்பாளர் 301 வாக்குகள் குறைவு appeared first on Dinakaran.

Tags : KARUR ,KARUR PARLIAMENTARY ,TANGAVEL ,L.A. ,Supreme Court ,Tangael ,Congress ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு-பரபரப்பு