×

₹7.75 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல், ஜூன் 5: நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், 300 பருத்தி மூட்டை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், ஆர்சிஎச் ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ₹8,129க்கும், மட்ட ரகம் ₹5,679க்கும் ஏலம் போனது. மொத்தம் ₹7.75 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.

The post ₹7.75 லட்சத்துக்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Namakkal Agricultural Producers Cooperative Sales Association ,Trichy ,Dinakaran ,
× RELATED பஸ் டிரைவரை கொன்று உடலை ஏரியில்...