×

மண்வளம் காக்க மானிய விலையில் பசுந்தாள் உரம்

வேப்பனஹள்ளி, ஜூன் 5: இது குறித்து வேப்பனஹள்ளி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சிவநதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டம், வேப்பனஹள்ளி வட்டாரத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 20கிலோ பசுந்தாள் உர விதைகள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் அந்தந்த பகுதிக்குட்பட்ட, உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு இணையத்தில் பதிவு செய்தல் அல்லது உழவன் செயலியில் பதிவு செய்து விவசாயிகள் பயன் அடையலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மண்வளம் காக்க மானிய விலையில் பசுந்தாள் உரம் appeared first on Dinakaran.

Tags : Veppanahalli ,Veppanahalli District ,Assistant Director of Agriculture ,Shivanathi ,Tamil Nadu ,Chief Minister ,
× RELATED மண்வளம் காக்க மானிய விலையில் பசுந்தாள் உரம்