×

ஆதிர்ரஞ்சன் சவுத்திரி விக்கெட்டை வீழ்த்திய கிரிக்கெட் வீரர் யூசுப்பதான்

மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்தவர் ஆதிர்ரஞ்சன் சவுத்திரி. இவர் பெகராம்பூர் தொகுதியில் 6வது முறையாக மீண்டும் களம் இறங்கினார். அவரை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானை களம் இறக்கியது. இதில் 84 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று யூசுப்பதான் முன்னிலை பெற்றார். அதே போல் இந்த மக்களவை தேர்தலில் மொத்தம் 78 முஸ்லிம் வேட்பாளர்கள் பல்வேறு கட்சிகள் சார்பில்நிறுத்தப்பட்டனர்.

அவர்களில் 15 பேர் முன்னிலை பெற்றுள்ளனர். சஹாரன்பூரில் இருந்து காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத் 80,000 வாக்குகள் வித்தியாசத்திலும், கைரானாவில் இருந்து 29 வயதான இக்ரா சவுத்ரி 60,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்கள். காஜிபூரின் தற்போதைய எம்.பி.யான அப்சல் அன்சாரியும் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஐதராபாத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். லடாக்கில் சுயேச்சை வேட்பாளர் முகமது ஹனீபா ஜான் 28,673 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். மற்றொரு சுயேச்சை வேட்பாளர்அப்துல் ரஷித் ஷேக் பாரமுல்லா தொகுதியில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

The post ஆதிர்ரஞ்சன் சவுத்திரி விக்கெட்டை வீழ்த்திய கிரிக்கெட் வீரர் யூசுப்பதான் appeared first on Dinakaran.

Tags : Yusuppa ,Adirranjan Chaudhary ,Adirranjan Chowdhury ,Congress party ,Lok Sabha ,Begarampur constituency ,Trinamool Congress ,Yusuf Pathan ,Yusuppatan ,Dinakaran ,
× RELATED மம்தாவுக்கு ஆதரவாக பேசியதால்...