×

நாட்டை உலுக்கிய பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியில் தோல்வி

பெங்களூரு: கர்நாடகாவின் ஹாசன் தொகுதி மஜத எம்.பியாக இருந்த பிரஜ்வல் ரேவண்ணா, இந்த மக்களவை தேர்தலிலும் பாஜ – மஜத கூட்டணி வேட்பாளராக அதே ஹாசன் தொகுதியில் போட்டியிட்டார். இத்தொகுதிக்கு ஏப்ரல் 26ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பலாத்காரம் செய்த வீடியோக்கள் வைரலாக பரவின.

இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வெளிநாட்டில் பதுங்கியிருந்த பிரஜ்வல் ரேவண்ணா, அரசு கொடுத்த அழுத்தத்தின் பேரில் கடந்த 31ம் தேதி பெங்களூருவிற்கு வந்தார். பாலியல் வழக்கில் பிரஜ்வலை கைது செய்து எஸ்.ஐ.டி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த சர்ச்சைக்கு நடுவே தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மாநில மக்களின் பார்வை ஹாசன் தொகுதி மீது விழுந்தது.

ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா 43,738 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். காங்கிரஸ் வேட்பாளர் ஷ்ரேயாஸ் பாட்டீல் 670274 வாக்குகளை பெற்றார். 626536 வாக்குகள் பெற்ற பிரஜ்வல் தோற்றார். பல பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய பிரஜ்வலுக்கு மக்கள் சரியான தீர்ப்பு வழங்கிவிட்டதாக பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

The post நாட்டை உலுக்கிய பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா ஹாசன் தொகுதியில் தோல்வி appeared first on Dinakaran.

Tags : Prajwal Revanna Haasan ,Bengaluru ,Prajwal Revanna ,Majda ,Hassan ,Karnataka ,BJP- ,Lok Sabha ,
× RELATED பெங்களூரு பாலியல் வழக்கு; கைதான...