×

பஞ்சாபில் பாஜ பூஜ்யம்

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகின்றது.இங்கு ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சி ஆகியவை இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. எனினும் மாநிலத்தில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டன. மேலும் இதுவரை ஒன்றாக இணைந்து போட்டியிட்டு வந்த பாஜ மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சியும் இந்த முறை மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட்டன. இதனையடுத்து பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது.

மொத்தமுள்ள 13 தொகுதிகளில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி 3 தொகுதிகளில் வெற்றி பெற்று ஒரு தொகுதியில் முன்னிலையில் இருந்தது. சிரோமணி அகாலி தளம் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. இரண்டு தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வென்றனர்.காதூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளரான சீக்கிய பிரிவினைவாதி அம்ரித் பால் சிங் வென்றார். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்ற இரண்டு பேரில் ஒருவரான பியாந்த்சிங்கின் மகன் சரப்ஜித் சிங் கல்சா பரித்கோட் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

The post பஞ்சாபில் பாஜ பூஜ்யம் appeared first on Dinakaran.

Tags : BJP ,Punjab ,Aam Aadmi Party ,Congress Party ,India Alliance ,Dinakaran ,
× RELATED மத்தியில் ஆட்சி அமைக்க இண்டியா...