×

சுயேட்சையாக வென்ற காங்கிரஸ் ஆதரவாளர் பீகார் பூர்னியா தொகுதியில் பப்பு யாதவ் அபார வெற்றி

பீகாரில் உள்ள பூர்னியா மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட முன்னாள் எம்பி ராஜேஷ் ரஞ்சன் என்கிற பப்பு யாதவ் 23,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பப்புயாதவ் தேர்தலுக்கு முன்பு தனது ஜன் அதிகார் கட்சியை (ஜேஏபி) காங்கிரசுடன் இணைத்தார். ஆனால் அவருக்கு பூர்னியா தொகுதியை லாலுகட்சி ஒதுக்காததால் சுயேட்சையாக களம் இறங்கினார். ஐக்கிய ஜனதாதளம் வேட்பாளர் சந்தோஷ்குமாரை விட பப்புயாதவ் 23 ஆயிரம்847 ஓட்டுகள்வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் 3வது முறையாக அந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

The post சுயேட்சையாக வென்ற காங்கிரஸ் ஆதரவாளர் பீகார் பூர்னியா தொகுதியில் பப்பு யாதவ் அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Pappu Yadav ,Congress ,Bihar Purnia ,Rajesh Ranjan ,Purnia Lok Sabha ,Bihar ,Pappuyadav ,Jan Adhikar Party ,JAP ,Independent ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு பப்பு யாதவ் ஆதரவு