×

தேர்தல் தோல்வி மனதுக்கு சங்கடமாக இருக்கிறது அசுர பலத்தோடு மீண்டும் அக்காவாக எனது பணி தொடரும்: தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி

சென்னை: தேர்தல் தோல்வி மனதுக்கு சங்கடமாக இருந்தாலும், அசுர பலத்தோடு மீண்டும் எழுந்து அக்காவாக எனது பணியை தொடருவேன் என்று பாஜ வேட்பாளர் தமிழிசை சவுந்திரராஜன் கூறினார். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனிடம் தமிழிசை சவுந்திரராஜன் தோல்வி அடைந்தார். இதைத்தொடர்ந்து தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: இத்தேர்தலில் 35 சதவீத மக்கள் தென் சென்னையில் எனக்கு வாக்கு அளித்திருக்கிறார்கள். வாக்களித்த ஒவ்வொரு வாக்காளருக்கும் அடிபணிந்து எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒற்றை நோக்கோடு தான் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தேன். இந்த தோல்வி என்பது மனதிற்கு சங்கடமாக இருந்தாலும் சேவை செய்வதற்கு வாய்ப்பளிக்கும் விதமாக அரசியலில் தீவிரமாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏறக்குறைய ஐந்தரை கோடி தமிழக மக்களின் மனதில் இடம் பிடிப்பேன். என்னை பொறுத்தவரை உச்ச பச்ச பதவியை பார்த்து விட்டேன், இவ்வாறு அவர் கூறினார்.

The post தேர்தல் தோல்வி மனதுக்கு சங்கடமாக இருக்கிறது அசுர பலத்தோடு மீண்டும் அக்காவாக எனது பணி தொடரும்: தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamilisai Soundrarajan ,CHENNAI ,BJP ,DMK ,Tamilachi Thangapandiyan ,South Chennai ,
× RELATED தமிழிசை சவுந்திரராஜனை பெண் என்றும்...