×

ராமர் கோவில் உள்ள அயோத்தியில் பாஜகவுக்கு தொடர்ந்து பின்னடைவு: ஃபைசாபாத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் முன்னிலை

லக்னோ: அயோத்தி ராமர் கோயில் உள்ள பைசாபாத் தொகுதியில் பாஜ வேட்பாளர் பின்தங்கினார். அங்கு சமாஜ்வாடி வேட்பாளர் 4,446 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார். உ.பி மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டியதை தனது ஆட்சியின் மாபெரும் சாதனையாக பிரதமர் மோடி பிரசாரம் செய்தார். பாஜவை இந்துத்துவா கட்சியாக முன்னிலைபடுத்த ராமர் கோயில் திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்தினார் பிரதமர் மோடி. ஆனால் இதன் தாக்கம் மக்களவை தேர்தலில், அயோத்தி நகரை உள்ளடக்கிய பைசாபாத் மக்களவை தொகுதியில் கூட இல்லை.

பைசாபாத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருந்தே பாஜக பின் தங்கியது. அங்கு பாஜக சார்பில் போட்டியிட்ட லல்லு சிங் 1,17,565 வாக்குகளும், அவருக்கு எதிராக போட்டியிட்ட சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் அவதேஷ் பிரசாத் 1,22,011 வாக்குகளும் பெற்றனர். பாஜக வேட்பாளரை விட சமாஜ்வாடி வேட்பாளர் 4446 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் உள்ளார். அயோத்தி ராமர் கோயில் உள்ள தொகுதியிலேயே பாஜக பின்தங்கியது பாஜவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

The post ராமர் கோவில் உள்ள அயோத்தியில் பாஜகவுக்கு தொடர்ந்து பின்னடைவு: ஃபைசாபாத்தில் சமாஜ்வாதி வேட்பாளர் முன்னிலை appeared first on Dinakaran.

Tags : BJP ,Ayodhya ,Samajwadi ,Faizabad ,LUCKNOW ,Ayodhya Ram Temple ,Ram ,Ayodhya, UP ,Ram temple ,
× RELATED ராமர் கோயில் தீர்ப்புக்கு பின்...