×

மக்களவை தேர்தலில் பாஜக எதிர்பார்த்த இடங்களை கைப்பற்றாததால் பங்குச்சந்தைகள் வரலாறு காணாத சரிவு..!!

மும்பை: மக்களவை தேர்தலில் பாஜக எதிர்பார்த்த இடங்களை கைப்பற்றாததால் பங்குச்சந்தைகள் வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.26 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இன்று மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், நேற்று இந்திய பங்குச்சந்தைகள் திடீர் ஏற்றம் பெற்றன. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 2,500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. ஆனால், இன்று காலை வாக்குப்பதிவு துவங்கியதில் இருந்து பாஜக பின்னடைவைச் சந்தித்தது. இதனால் பங்குச்சந்தைகளில் கடும் சரிவு காணப்பட்டது.

நேற்று மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 76,468.78 புள்ளிகளாக இருந்தது. ஆனால், இன்று காலை வர்த்தகம் துவங்கியபோதே 76,285.78 புள்ளிகள் என சரிவுடன் ஆரம்பித்தது. அதிகபட்சமாக 76,300.46 புள்ளிகள் வரை சென்றது. இருப்பினும், நேற்று மதியம் 5,200 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 71,359.45 புள்ளிகள் ஆனது. அதாவது, முந்தைய வர்த்தகத்தை விட 6.63 சதவீதம் சரிந்தது. இதுபோல், தேசிய பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 6.99 சதவீதம் அதாவது, 1,626 புள்ளிகள் சரிந்து 21,638 புள்ளிகளாக இருந்தது. இந்த திடீர் சரிவால் பங்கு முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.26 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

The post மக்களவை தேர்தலில் பாஜக எதிர்பார்த்த இடங்களை கைப்பற்றாததால் பங்குச்சந்தைகள் வரலாறு காணாத சரிவு..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,Lok Sabha elections ,MUMBAI ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி...