×

தமிழக எல்லையருகே உள்ள ஆந்திராவின் நகரி தொகுதியில் அமைச்சர் ரோஜா பின்னடைவு..!!

ஆந்திரா: தமிழக எல்லையருகே உள்ள ஆந்திராவின் நகரி தொகுதியில் அமைச்சர் ரோஜா பின்னடைவில் உள்ளார்.ஆந்திர மாநிலத்தில் லோக்சபா தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடந்து முடிந்தது. இந்த இரண்டு தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடைபெற்றது.இதில் சட்டசபை தேர்தலில் சுற்றுசூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருமான நடிகை ரோஜா, நகரி சட்டசபை தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார்.

ஏற்கனவே, இந்த தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்ற ரோஜா தற்போது மூன்றாவது முறையாக களமிறங்கினார். இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி 27,000 வாக்குகள் வித்தியாசத்தில் நடிகை ரோஜா பின்தங்கியுள்ளார். அவரை எதிர்த்து 2 முறை தோல்வி அடைந்த தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர் பானு பிரகாஷ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தற்போது இந்த தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.

 

The post தமிழக எல்லையருகே உள்ள ஆந்திராவின் நகரி தொகுதியில் அமைச்சர் ரோஜா பின்னடைவு..!! appeared first on Dinakaran.

Tags : Minister Roja ,Nagari constituency ,Andhra Pradesh ,Tamil Nadu ,Minister ,Roja ,Lok Sabha elections ,Andhra ,
× RELATED ஆந்திராவில் ஆட்சியை பிடித்த நிலையில்...