×

2024 சட்டமன்ற தேர்தல்… ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை.. ஒடிசாவில் பாஜக முன்னிலை; இரண்டிலும் ஆளும் கட்சிகள் பின்னடைவு!!

டெல்லி : 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுடன் சிக்கிம், ஒடிசா, ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 32 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட சிக்கிம் மாநிலத்தில் ஆட்சியமைக்க 17 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 இடங்களைக் கைப்பற்றி வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது. மேலும், ஆட்சியை தக்க வைத்தது. அதே போல் 60 தொகுதிகளை கொண்ட அருணாசலப் பிரதேசத்தில் 46 தொகுதிகளை வென்று மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது.

இதனிடையே ஆந்திர மாநிலத்தின் ஒரே கட்டமாக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மே 13ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பவன் கல்யாணின் ஜன சேனா, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி கட்சிகளும், எதிர்த்து தனித்து போட்டியிட்டுள்ளது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ். மொத்தமுள்ள 175 சட்டமன்ற தொகுதிகளின் தற்போது வரை வெளியான முன்னிலை விவரங்களில் 113 இடங்களில் தெலுங்கு தேசம் கூட்டணியும், 18’இல் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன. அதே போல் 147 தொகுதிகளை கொண்ட ஒடிசா சட்டமன்ற தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் 30 இடங்களிலும் பாஜக 50 இடங்களிலும் காங்கிரஸ் 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

The post 2024 சட்டமன்ற தேர்தல்… ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை.. ஒடிசாவில் பாஜக முன்னிலை; இரண்டிலும் ஆளும் கட்சிகள் பின்னடைவு!! appeared first on Dinakaran.

Tags : 2024 Assembly Elections ,Telugu Nation Alliance ,BJP ,Odisha ,Delhi ,Sikkim ,Andhra Pradesh ,Arunachal Pradesh ,2024 Lok Sabha elections ,2024 Assembly Election ,Andhra ,
× RELATED ஆந்திர தலைநகர் அமராவதிதான்; இனி 3...