×

நாடாளுமன்ற தேர்தல் 2024: இந்தியா கூட்டணி தொடர்ந்து முன்னிலை: பாஜகவுக்கு பின்னடைவு

டெல்லி: பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான 18வது மக்களவை தேர்தல் 7 கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடத்தப்பட்டது. இத்துடன், ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும், சில மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில், அருணாச்சல், சிக்கிம் மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் ஜூன் 2ம் தேதியுடன் முடிவடைவதால் அவ்விரு மாநிலங்களுக்கு மட்டும் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மக்களவை தேர்தல், ஆந்திரா, ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இந்த பரபரப்பான சூழலில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்ட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

* தபால் வாக்கு எண்ணிக்கையில் மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறன் முன்னிலை பெற்றுள்ளார்

* மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் முன்னிலையில் உள்ளார்

* தபால் வாக்குகளில் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார்.

* திருச்சி தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கையில் துரை வைகோ முன்னிலை

* வேலூரில் வாக்கு எண்ணும் மையத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் பொது இருக்கைகள் இல்லை என கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். கூச்சல், குழப்பத்தால் தபால் வாக்கு எண்ணும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

* காலை 8.20 மணி நிலவரப்படி இந்தியா கூட்டணி 108 தொகுதிகளிலும், பாஜக 85 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது

* கன்னியாகுமரியில் கத்தியுடன் வந்த சுயேச்சை வேட்பாளர் ராஜன் சிங்கை போலீஸ் கைது செய்தது.

* ராகுல் காந்தி போட்டியிட்ட வயநாடு, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார்.

* கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலை பெற்றுள்ளார்.

* தென் சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தாமதமாக தொடக்கம்; 18 நிமிட தாமதத்திற்குப் பின் தபால் வாக்குப்பெட்டி முகவர்கள் முன்னிலையில் திறப்பு

* மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடக்கம்

* வாரணாசியில் 3வது முறையாக களமிறங்கியுள்ள நரேந்திர மோடி முன்னிலையில் உள்ளார்

* கேரளா மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல்காந்தி முன்னிலை

* ஆந்திர சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தெலுங்கு தேசம் 3 இடங்களில் முன்னிலை.

* கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை

* காலை 8.40 மணி நிலவரப்படி மண்டி தொகுதி பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் பின்னடைவு

* கர்நாடகா ஹசன் தொகுதியில் மஜத கட்சி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை; பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பிரஜ்வல் ரேவண்ணா ஹசன் தொகுதியில் முன்னிலை

* மத்திய சென்னை தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தயாநிதி மாறன் தொடர்ந்து முன்னிலை; முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் 4,000 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார் தயாநிதி மாறன்

* மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன் 1,147 வாக்குகள் பெற்று முன்னிலை

* கேரள மாநிலம் திருச்சூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சுரேஷ்கோபி பின்னடைவு

* திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பின்னடைவு

* சிவகங்கை தொகுதியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் காங். வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் முன்னிலை: 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் கார்த்தி சிதம்பரம் முன்னிலையில் உள்ளார்

* தஞ்சை தொகுதியில் திமுக வேட்பாளர் முரசொலி 6,454 வாக்குகள் பெற்று முன்னிலை

* ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

* கோவை தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பின்னடைவு

* நெல்லை தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு பின்னடைவு

* டெல்லியில் 7 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை

* நீலகிரி தொகுதியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பின்னடைவு

* ராமநாதபுரம் தொகுதியில் 30% தபால் வாக்குகள் நிராகரிப்பு

* தேனி தொகுதியில் டிடிவி தினகரன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்

* திண்டுக்கல் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் 2,000 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை

* தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி, 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

* விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்கு பின்னடைவு

* விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலை

* மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா 2,028 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

The post நாடாளுமன்ற தேர்தல் 2024: இந்தியா கூட்டணி தொடர்ந்து முன்னிலை: பாஜகவுக்கு பின்னடைவு appeared first on Dinakaran.

Tags : Parliamentary Election 2024 ,India Alliance ,BJP ,Delhi ,18th Lok Sabha elections ,
× RELATED பாடப்புத்தகங்களில் நாட்டின் பெயரை...