×

கண்மாயில் மூழ்கி குழந்தை பலி

 

மானாமதுரை, ஜூன் 4: மானாமதுரை அருகே கண்மாயில் மூழ்கி 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மானாமதுரை சிப்காட் பகுதியை சேர்ந்தவர் ஜவஹர்லால் நேரு. இவரது குழந்தைகள் தர்ஷன்(8), அதிபன்(5), கவிதா(3). நேற்று மதியம் குழந்தைகள் அதிபனும், கவிதாவும் சிப்காட் தாலுகா அலுவலகம் எதிரே கண்மாய்க்கு விளையாட சென்றுள்ளனர். சமீபத்தில் பெய்த மழைக்கு கண்மாயில் நீர் நிறைந்து காணப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக கவிதா தண்ணீரில் விழுந்து மூழ்கி இறந்தார். புகாரின்பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கண்மாயில் மூழ்கி குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Manamadurai ,Jawaharlal Nehru ,Chipgat ,Darshan ,Athipan ,Kavita ,Chipkot ,Kanmai ,
× RELATED வீட்டின் பூட்டை உடைத்து 58 பவுன் தங்க நகையை கொள்ளையடித்தவர் கைது