×

சிறுமுகை பகுதியில் கலைஞரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

 

மேட்டுப்பாளையம், ஜூன் 4: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை தியேட்டர் மேடு பகுதியில் காரமடை கிழக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் சார்பில் கலைஞரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. காரமடை கிழக்கு ஒன்றிய செயலாளர் எஸ்எம்டி கல்யாணசுந்தரம், கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திமுக கழக கொடி ஏற்றி வைத்தனர்.

சிறுமுகை பேரூராட்சி அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த கலைஞரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியதோடு, விளையாட்டுப்போட்டிகளை நடத்தி பரிசுகளையும் வழங்கினர். மாநில பொதுக்குழு உறுப்பினர் நவீன், சிறுமுகை பேரூர் கழக செயலாளர் உதயகுமார், பேரூராட்சி தலைவர் மாலதி உதயகுமார், துணைத்தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சிறுமுகை பகுதியில் கலைஞரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Sirumugai ,Mettupalayam ,Karamadai East Union ,Perur Kazhagam ,Sirumugai Theater Medu ,Smt Kalyanasundaram ,Coimbatore District ,
× RELATED மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில்...