×

திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.74.35 லட்சம் வசூல்

 

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் நேற்று உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டத்தில், ரூ.74.35 லட்சம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் காணிக்கை உண்டியல் எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர்கள் குமரவேல், சரவணன், மேகவண்ணன், ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இந்த, உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பக்தர்களால் 74 லட்சத்து 35 ஆயிரத்து 790 ரூபாய் ரொக்கம், 297 கிராம் தங்கம், 4,910 கிராம் வெள்ளி ஆகியவை போடப்பட்டு இருந்தது. இந்த பணியில் ஏராளமான பக்தர்கள், கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

The post திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.74.35 லட்சம் வசூல் appeared first on Dinakaran.

Tags : Tiruppurur Kandaswamy Temple ,Tiruporur ,Tiruporur Kandaswamy ,Hindu ,Kumaravel ,Saravanan ,Meghavannan ,Tirupporur Kandaswamy Temple ,
× RELATED திருப்போரூர் கந்தசுவாமி கோயில் தலைமுடி காணிக்கை ரூ.53.62 லட்சம் ஏலம்