×

சென்செக்ஸ் 2,507 புள்ளிகள் உயர்வு பங்குச்சந்தைகள் திடீர் ஏற்றம்

மும்பை: பங்குச்சந்தைகள் நேற்று வரலாறு காணாத ஏற்றத்தை சந்தித்தன. இந்திய பங்குச்சந்தைகள் அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டன. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறறது. தேர்தல் நடைபெற்ற காலங்களில் திடீர் சரிவுகள் முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவில் இழப்புகளை ஏற்படுத்தியது. வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. இந்நிலையில், மும்பை பங்குச்சந்தையில் நேற்று திடீர் ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், காலையில் வர்த்தகம் துவங்கியபோதே, 76,583.29 புள்ளிகளில் ஏற்றத்துடன் துவங்கியது. அதிகபட்சமாக 76,738.89 புள்ளிகள் வரை சென்றது. வர்த்தக முடிவில் 2,507.47 புள்ளிகள் அதாவது, 3.39% ஏற்றம் பெற்று, 76,468.78 புள்ளிகளில் நிறைவு பெற்றது. இதுபோல், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிப்டி 733.20 புள்ளிகள் அதாவது, 3.25% சதவீதம் ஏற்றம் பெற்று 23,263.90 புள்ளிகளில் நிறைவு பெற்றது. நான்கு ஆண்டுகளில் இல்லாத ஏற்றம் இது என சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர்.

The post சென்செக்ஸ் 2,507 புள்ளிகள் உயர்வு பங்குச்சந்தைகள் திடீர் ஏற்றம் appeared first on Dinakaran.

Tags : Sensex ,MUMBAI ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 269 புள்ளிகள் சரிவு..!!