×

அடுத்தடுத்து இரு வீடுகளில் 15 சவரன், ரூ.1 லட்சம் திருடியவர் சிக்கினார்

அம்பத்தூர்: சென்னை திருமங்கலம் மற்றும் நொளம்பூர் ஆகிய பகுதிகளில் அடுத்தடுத்து 2 வீடுகளில் 15 சவரன் மற்றும் ரூ.1 லட்சம் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருமங்கலம் பாடி குப்பம் பகுதியை சேர்ந்தவர் சாந்தி (58). இவர் சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் 30ம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர், பிரோவில் வைத்திருந்த 5 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் சாந்தி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அதே நாளில் நொளம்பூர் பகுதியில் உள்ள வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை மற்றும ரூ.50 ஆயிரத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றதாக நொளம்பூர் காவல் நிலையத்தில் புகார் பதிவானது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இவரின் கூட்டாளியை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கோவைக்கு விரைந்துள்ளனர்.

The post அடுத்தடுத்து இரு வீடுகளில் 15 சவரன், ரூ.1 லட்சம் திருடியவர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Ampathur ,Sawaran ,Tirumangalam ,Nolampur ,Chennai ,Shanti ,Tirumangalam Badi Kuppam ,Chennai Anna ,
× RELATED குளிக்கும்போது வீடியோ எடுத்து...