×

தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் மறியல்

பெரம்பூர்: அயனாவரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட என்.எம்.கே தெருவில் கடந்த 3 நாட்களாக மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அடிக்கடி அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வெகுநேரம் ஆகியும் மின்சாரம் வராததால் அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு குன்னூர் நெடுஞ்சாலை பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 40க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து, மின்சாரம் வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர். அயனாவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மின்வாரிய உதவி பொறியாளர் உள்ளிட்டோரை அங்கு வரவழைத்தனர். அதன்பிறகு பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக அப்பகுதியில் மின்சாரம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Perambur ,N.M.K Street ,Ayanavaram Police Station ,Dinakaran ,
× RELATED வெடித்து சிதறிய மின்பெட்டி