×

கலைஞரின் பிறந்தநாளையொட்டி ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர், எம்எல்ஏக்கள் வழங்கினர்

தாம்பரம்: கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகர திமுக சார்பில் தாம்பரம் பேருந்து நிலையத்தில் 1000க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா அன்னதானம் வழங்கினார். உடன் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மண்டல குழு தலைவர் டி.காமராஜ், மாமன்ற உறுப்பினர் ரமணி ஆதிமூலம், சுரேஷ், பெரியநாயகம், திமுக நிர்வாகிகள் ஜா.ரவி, செல்வகுமார், கருணாகரன், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கார்த்திக், ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, தாம்பரம் – முடிச்சூர் சாலையில் குளக்கரை அருகே அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா புத்தக பைகளை வழங்கினார். இதேபோல, பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லாவரம் வடக்கு மற்றும் தெற்கு, செம்பாக்கம் வடக்கு பகுதிகளில் கலைஞர் கருணாநிதியின் 101வது பிறந்தநாளை முன்னிட்டு, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினர்.

உடன் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் இ.ஜோசப் அண்ணாதுரை, பகுதி செயலாளர்கள் ஏ.கே.கருணாகரன், இ.எஸ்.பெர்னாட் உட்பட பலர் கலந்து கொண்டனர். செம்பாக்கம் தெற்கு பகுதி திமுக சார்பில் பகுதி செயலாளர் செம்பாக்கம் ரா.சுரேஷ் ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் அன்னதானம் வழங்கினார். உடன் அவை தலைவர் ராமச்சந்திரன், மாநகர பொருளாளர் கண்ணன் (எ) விஜயரங்கன், துணை செயலாளர்கள் லட்சுமிபதி ராஜா, கல்யாணி மணிவேல், முத்து (எ) முருகன், மாமன்ற உறுப்பினர்கள் ராஜா, கற்பகம் சுரேஷ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post கலைஞரின் பிறந்தநாளையொட்டி ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர், எம்எல்ஏக்கள் வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Karunanidhi ,MLA S.R.Raja ,Tambaram Bus Station ,Tambaram Municipal DMK ,Tambaram Municipal Corporation ,Mayor ,Vasantakumari Kamalakannan ,Mandal ,Dinakaran ,
× RELATED செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெற 20ம்...