×

வெடித்து சிதறிய மின்பெட்டி

பெரம்பூர்: அயனாவரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பார்த்தசாரதி தெருவில் உள்ள மின் பகிர்மான பெட்டி நேற்று முன்தினம் நள்ளிரவில் உயர் மின் அழுத்தம் காரணமாக வெடித்துச் சிதறியது. பலத்த சத்தத்துடன் வெடித்ததால் அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்தபோது, மின் பெட்டியில் தீப்பற்றி எரிந்தது. உடனடியாக மணல் மற்றும் அருகில் இருந்த தீயணைப்பு கருவிகளைக்கொண்டு பொதுமக்கள் தீயை அணைத்தனர். தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

The post வெடித்து சிதறிய மின்பெட்டி appeared first on Dinakaran.

Tags : Perambur ,Parthasarathy Street ,Ayanavaram Police Station ,Dinakaran ,
× RELATED தொடர் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் மறியல்