×

காஞ்சி, செங்கை மாவட்டத்தில் கலைஞரின் 101வது பிறந்தநாள் கொண்டாட்டம்: திமுகவினர் மலர் தூவி மரியாதை

ஸ்ரீபெரும்புதூர்:காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைஞரின் 101வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்தும், ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் உற்சாகமாக திமுகவினர் கொண்டாடினர். ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ்குமார் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட கலைஞரின் உருவப்படத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, தெற்கு ஒன்றிய செயலாளர் கோபால், ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி போஸ்கோ, மாவட்ட தலைவர் குன்னம் முருகன், மாவட்ட கவுன்சிலர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு, மலர் தூவி மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

அதேபோல், ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் சுங்குவார்சத்திரம் பகுதியில் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி தலைமையில கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இதில், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் பொடவூர் ரவி, அவை தலைவர் சிவபதம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் திருமங்கலம் நரேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றிய மற்றும் நகர திமுக சார்பில், கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு, உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் எம்பி செல்வம், நகர செயலாளர் பாரிவள்ளல், உத்திரமேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், காஞ்சிபுரம் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, உத்திரமேரூர் பஜார் வீதியில் அமைக்கபட்டிருந்த கலைஞரின் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து, உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டிருந்த சமபந்தி விருந்து நிகழ்ச்சியை சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்து, ஏழை எளிய மக்களுக்கு உணவளித்தார். இந்த சமபந்தி விருந்தில் 2000க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்கள் உண்டு மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு திமுக மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் மற்றும் காட்டாங்கொளத்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் ஆகியோரின் ஆலோசனைப்படி காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், மேலமையூர் ஊராட்சி திமுக ஏற்பாட்டில் கலைஞரின் 101வது பிறந்த நாளையொட்டி, அவரது உருவ படத்திற்கு திமுக காட்டாங்கொளத்தூர் துணைச்செயலாளர் கருணாகரன் மலர் துவி மரியாதை செய்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

இதில் மேலமையூர் திமுக பிரமுகர்கள் அன்புச்செழியன், ரவீந்திரன், சுரேஷ், விஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் விளாங்காடு ஊராட்சியில் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, முன்னாள் ஒன்றிய திமுக செயலாளர் விஜயன் தலைமை தாங்கினார். கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். விழாவில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, சித்தாமூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிற்றரசு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நடராசன், ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலை மாரிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதோபோல், மதுராந்தகம் 17வது வார்டில் மேலவை பிரதிநிதி கார்த்திக் சாரதி, பரத், நகர மாணவரணி துணை அமைப்பாளர் வசந்த் சாரதி ஆகியோரின் முன்னிலையில் திமுக கொடி ஏற்றி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. அதனை தொடர்ந்து பொதுமக்கள் 500 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நகர செயலாளர் குமார், நகர மன்ற தலைவர் மலர்விழி குமார், வார்டு செயலாளர் ஜெய்சங்கர், பழனிச்சாமி, கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூடுவாஞ்சேரி: நந்திவரம்-கூடுவாஞ்சேரியில் நகர திமுக சார்பில் கலைஞரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் திமுக நகர மன்ற தலைவரும், நகர செயலாளருமான எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணி தலைமை தாங்கினார். துணை தலைவர் லோகநாதன், சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமிமதுசூதனன் கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடினர். முன்னதாக கலைஞரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல், நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட கொளப்பாக்கம் அடுத்த அண்ணாநகர் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் கலைஞரின் பிறந்தநாள் விழா ஊராட்சி மன்ற தலைவர் வனிதாஸ்ரீசீனிவாசன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இனிடையே, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்த நாள் விழாவும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவரும், திமுக நகர செயலாளர் எம்.கே.டி.கார்த்திக்தண்டபாணியின் பிறந்தநாள் விழாவும் ஒரே நாளில் இருந்ததால் நகராட்சி முழுவதும் 20 இரு பிறந்தநாள் விழாவையும் தொண்டர்கள் நேற்று காலமாக கொண்டாடினர்.

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூர், ஒன்றிய திமுக சார்பில், கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா நேற்று விமர்சையாக கொண்டாடப்பட்டன. முன்னதாக, வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட 61 ஊராட்சிகளிலும் திமுக கொடி கம்பங்களில் புதிய கொடிகளை ஏற்றி இனிப்புகளும், அன்னதானங்களும் வழங்கப்பட்டன.இதேபோல், வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் உள்ள திமுக கொடி கம்பங்களில் புதிய கொடிகளை ஏற்றியும், ஏழை எளியவர்களுக்கு அன்னதானங்கள் வழங்கினர்.

தொடர்ந்து, வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகாமையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 1000 பேருக்கு பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றன. இதில் மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, செல்வம் எம்பி ஆகியோர் கலந்துகொண்டு ஏழை, எளியோர்களுக்கு தலைவாழை இலையுடன் பிரியாணி பரிமாறினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சேகர், பேரூர் செயலாளர் பாண்டியன், ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், பேரூராட்சி தலைவர் இல்லாமல்லி ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பாரதபுரம் பகுதியில் கலைஞரின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சந்தானம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டார்.

அப்போது, கலைஞரின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து பாரதபுரம் பகுதியில் உள்ள தொழுநோயாளி குடியிருப்பில் உள்ள முதியோர்கள் 100 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இதேபோல் பாரதபுரம் பகுதியில் உள்ள அன்பு இல்லத்தில் உள்ள முதியோர்கள் 100 பேருக்கு அறுசுவை உணவு வழங்கினார்.

The post காஞ்சி, செங்கை மாவட்டத்தில் கலைஞரின் 101வது பிறந்தநாள் கொண்டாட்டம்: திமுகவினர் மலர் தூவி மரியாதை appeared first on Dinakaran.

Tags : Kanchi, Senkai District ,DMK ,Sriperumbudur ,Kanchipuram, Chengalpattu district ,Sriperumbudur Bus Stand ,Satish Kumar ,
× RELATED மாடுகள் குறுக்கே ஓடியதால் சாலையோர பள்ளத்தில் பாய்ந்த அரசு பேருந்து