×

வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்: மின்வாரியம் அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. எனவே வாக்கு எண்ணிக்கை மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரியம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் இன்றும் மற்றும் நாளையும் தடையில்லா மின்சாரம் வழங்குவதை அனைத்து செயற்பொறியாளர்களும் உறுதி செய்ய வேண்டும். மேலும் மின்விநியோகத்தை கண்காணித்தல், பராமரித்தல் மற்றும் அவசரகால செயல்பாடுகள் ஏதேனும் இருந்தால், ஒருங்கிணைத்து விரைவாக மறுசீரமைப்பு செய்தல் ஆகிய பணிகளை துணை மின்நிலையத்தில் உள்ள ஷிப்ட் ஆபரேட்டர்கள் மேற்கொள்ளவும், பணி நேரங்களில் அதிக விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

The post வாக்கு எண்ணும் மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்: மின்வாரியம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Power ,CHENNAI ,Power Board ,Dinakaran ,
× RELATED ஐ.டி.காரிடர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது