×

ஐ.டி.காரிடர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது

சென்னை: தரமணி ஐ.டி.காரிடர் கோட்டத்திற்கு நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தரமணி ஐ.டி.காரிடர் கோட்டத்திற்கு உட்பட்ட சி.எஸ்.ஐ.ஆர் ரோட்டில் உள்ள டைடல் பார்க் துணை மின் நிலைய வளாகத்தில் நாளை காலை 10.30 மணிக்கு செயற்பொறியாளர் தலைமையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களின் மின் தொடர்பான சந்தேகம் மற்றும் குறைகளை தெரிவித்து அதற்கான விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஐ.டி.காரிடர் கோட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்: நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,electricity board ,Taramani ,Corridor ,Power Board ,Tidal Park ,CSIR Road ,
× RELATED காற்றாலை மின் உற்பத்தி உயர்வு