×

பங்களா மின் இணைப்பு துண்டிப்பை எதிர்த்து; ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தையூரில் உள்ள தனது பங்களாவின் மின் இணைப்பை துண்டித்ததை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,வழக்கை சமசர தீர்வு மையத்திற்கு அனுப்பலாமா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு ராஜேஷ் தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்ட நிலையில் பீலா வெங்கடேசன் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

அவரது சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வீட்டின் மீது ராஜேஷ் தாசுக்கு எந்த உரிமையும் இல்லாத நிலையில் மீண்டும் மின் இணைப்பு வழங்க கோரிக்கை விடுக்க முடியாது என்றார். ராஜேஷ் தாஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் வி.பிரகாஷ், வீட்டுக்கடனை ராஜேஷ் தாஸ்தான் செலுத்தி வருகிறார். அவரது உடல் நலன் கருதி மீண்டும் மின் இணைப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றார். இரு தரப்பு வாதங்களை அடுத்து, ராஜேஷ் தாஸ் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.

 

The post பங்களா மின் இணைப்பு துண்டிப்பை எதிர்த்து; ராஜேஷ் தாஸ் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Bangla ,Rajesh Das ,CHENNAI ,DGP ,Court ,Taiyur ,Justice ,Anita Sumant ,Center for Settlement ,Dinakaran ,
× RELATED மின்இணைப்பு வழங்கக் கோரி மனு: ராஜேஷ் தாஸ் கோரிக்கை நிராகரிப்பு