×

கடம்பூர் மலைச் சாலையில் மூங்கில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதிகளான திங்களூர், சுஜில்கரை, காடுபசுவன்மாளம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு மழை பெய்தது. காற்றுடன் கூடிய மழை பெய்ததால் கடம்பூரில் இருந்து கேர்மாளம் செல்லும் சாலையில் காடு பசுவன்மாளம் அருகே வனப்பகுதியில் சாலையோரம் இருந்த மூங்கில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன.

இதன் காரணமாக இன்று காலை கடம்பூரில் இருந்து கேர்மாளம் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இத்தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் மலை கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இப்பணி முடிந்ததும் போக்குவரத்து சீரானது.

The post கடம்பூர் மலைச் சாலையில் மூங்கில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kadampur Hill Road ,Sathyamangalam ,Kadampur ,Erode district ,Dingalur ,Sujilkarai ,Kadubashuvanmalam ,Kadapur ,Kermalam ,Pashuvanmalam ,Kadapur hill road ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் கடம்பூர் மலைப்பகுதியில் யானை தாக்கி ஒருவர் படுகாயம்..!!