×

ஜப்பானில் நிலநடுக்கம்: ரயில் சேவை நிறுத்தம்

டோக்கியோ: ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்ச்சியாக, கிழக்கு ரயில்வேக்கு உட்பட்ட புல்லட் ரயில் சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டது. ஜப்பான் நாட்டில் இஷிகாவா மாகாணத்தில் இன்று காலை 6.31 மணியளவில் (அந்நாட்டு நேரப்படி) கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 5.9 ஆக பதிவானதால், வஜிமா மற்றும் சுசு நகரங்களில் நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டன. இதேபோன்று நிகடா மாகாணத்தில் உள்ள நோடோ நகரம், நனாவ் மற்றும் அனாமிசு நகரம் மற்றும் சில பகுதிகளிலும் நிலநடுக்கங்கள் உணரப்பட்டன.

நிலநடுக்கம் தொடர்ச்சியாக கிழக்கு ரயில்வே, புல்லட் ரயில் சேவையை தற்காலிக ரத்து செய்தது. மின்சார செயலிழப்பால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. எனினும், காலை 6.50 மணியளவில் ரயில் சேவை மீண்டும் செயல்பட தொடங்கியது. நிலநடுக்கம் ஏற்பட்டபோதும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ஜப்பானில் நிலநடுக்கம்: ரயில் சேவை நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Earthquake in ,Japan ,Tokyo ,Eastern Railway ,Ishikawa Prefecture ,in Japan ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி பகுதியில் நிலநடுக்கம்