×

குதிரைவாலி வெண் பொங்கல்

தேவையானவை

குதிரைவாலி – 1 கப்
பாசிப் பருப்பு – கால் கப்
மிளகு – சிறிதளவு
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை
நெய், உப்பு – தேவையான அளவு
வறுத்த முந்திரிப் பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது.

செய்முறை:

குதிரைவாலி, பாசிப்பருப்பு சிறிது நேரம் ஊற வைத்து வேக வைத்து கொள்ளவும். வெந்ததும் அத்துடன் மிளகு, மஞ்சள் தூள், உப்பு, சேர்த்து கிளறவும். நெய்யில் மிளகு, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். அத்துடன் வறுத்த முந்திரியை தூவி கிளறி இறக்கவும். சுவையான குதிரைவாலி வெண் பொங்கல் தயார்.

The post குதிரைவாலி வெண் பொங்கல் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED திருமண பந்தத்தை உறுதியாக்கும் நல்ல நேரம்