×

மோடி மீண்டும் பிரதமராக பாஜக மேலிட பொறுப்பாளர் கோவையில் ரகசிய ஹோமம்

கோவை: மோடி 3வது முறையாக பிரதமராக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் ரகசிய ஹோமம் மற்றும் பூஜை செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு: நாடாளுமன்ற தேர்தலில் 7ம் மற்றும் இறுதிகட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் கோவை மாவட்டம் காரமடை அடுத்துள்ள கண்டியூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தமிழக பாஜவின் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ரகசியமாக ஹோமம் வளர்த்து, சிறப்பு சிவ காளி பூஜை மற்றும் கோபூஜை செய்து வழிபட்டுள்ளார். மோடி மீண்டும் பிரதமராக சுதாகர் ரெட்டி ஹோமம் மற்றும் பூஜை நடத்தியது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post மோடி மீண்டும் பிரதமராக பாஜக மேலிட பொறுப்பாளர் கோவையில் ரகசிய ஹோமம் appeared first on Dinakaran.

Tags : Modi ,BJP ,Coimbatore ,supremo ,
× RELATED பா.ஜவுக்கு பெரும்பான்மை இல்லை; மோடி...