×

முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தியானம்

வாழப்பாடி: நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூரில் உள்ள ஸ்ரீமுத்துமலை முருகன் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். கோயிலில் உள்ள விநாயகரை தரிசனம் செய்த அவர் பின்னர், 146 அடி உயரமுள்ள முத்துமலை முருகனுக்கு பாத பூஜை செய்து தரிசனம் செய்தார்.

மேலும் 146 அடி உயரமுள்ள வேலுக்கு அபிஷேகம் செய்ததுடன், அங்குள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து சுமார் 15 நிமிடம் தியானத்தில் ஈடுபட்டார். இதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார். கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்து சென்ற நிலையில் எடப்பாடியும் தியானம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

The post முத்துமலை முருகன் கோயிலில் எடப்பாடி பழனிசாமி தியானம் appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Palaniswami ,Muthumalai Murugan Temple ,Vazhapadi ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Swami ,Srimuthumalai Murugan temple ,Ettapur ,Vazhapappadi ,Salem ,Ganesha ,Edappadi Palaniswami Meditation ,
× RELATED தொடர் தோல்விகளால் அதிருப்தி எடப்பாடி...