×

கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியருக்கு ஜாமீன்

சென்னை: பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஐகோர்ட் ஜாமீன் வழங்கியது. முன்னாள் மாணவி அளித்த புகாரில் கடந்த 22-ல் ஸ்ரீஜித் கிருஷ்ணாவை போலீஸ் கைது செய்தது. தனக்கு உள்ள நற்பெயரை கெடுக்கும் வகையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீஜித் கிருஷ்ணா தரப்பு வாதிட்டது. இன்னும் சிலர் புகாரளிக்க உள்ளதாக கூறி ஸ்ரீஜித் கிருஷ்ணாவுக்கு ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. ஸ்ரீஜித் கிருஷ்ணா வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் விசாரணை நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற வேண்டும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

The post கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியருக்கு ஜாமீன் appeared first on Dinakaran.

Tags : Kalashetra ,Chennai ,ICOURT ,Srijit Krishna ,Dinakaran ,
× RELATED பெசன்ட்நகர் கடற்கரையில் நடைபெற்ற...