×

தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் ஜூன் 5-ல் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai Meteorological Centre ,Chennai ,Meteorological Centre ,Vellore ,Ranipetta ,Tirupathur ,Tiruvannamalai ,Dharumpuri ,Krishnagiri ,Erode ,Chennai Meteorological Survey ,
× RELATED காற்றின் வேகமாறுபாடு காரணமாக...