×

விளைச்சல் பாதிப்பு: திண்டுக்கலில் சௌவ் சௌவ் காய்கறி விலை உயர்வு

திண்டுக்கல்: திண்டுக்கல் அடுத்த சிறுமலையில் சௌவ் சௌவ் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்ந்துள்ளது. சிறுமலை விவசாயிகள் 100 ஏக்கருக்கு மேல் சௌவ் சௌவ் விவசாயம் செய்திருந்தனர். கோடை மழை பெய்ததால் தற்போது சௌவ் சௌவ் கொடிகளில் நோய் தாக்கி அழுகி வீணாகி உள்ளது. அழுகி வீணாகி உள்ளதால் சௌவ் சௌவ் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. 45 கிலோ எடை கொண்ட ஒரு சிப்பம் ரூ.2,000 முதல் ரூ.2,300 வரை விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வந்தால் சௌவ் சௌவ் விலை மேலும் உயரக்கூடும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

The post விளைச்சல் பாதிப்பு: திண்டுக்கலில் சௌவ் சௌவ் காய்கறி விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Surumalai ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு...