×

கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா: துரை வைகோ மரியாதை

அரியலூர்: கலைஞரின் 101வது பிறந்தநாள் விழாவையொட்டி மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ மரியாதை செலுத்தினார். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் கீழக்கொளத்தூரில் நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு கலைஞர் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து துரை வைகோ மரியாதை செலுத்தினார். நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் அரியலூர் க.ராமநாதன்,

பெரம்பலூர் எஸ்.ஜெயசீலன், தஞ்சாவூர் தெற்கு தமிழ்செல்வன், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் செ.துரைராசு, மாநில விவசாய அணி செயலாளர் வாரணவாசி இராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் சகாதேவன், தஞ்சை மாநகர செயலாளர் துரை சிங்கம், ஒன்றிய செயலாளர் என்.ரமேஷ் பாபு, திமுக கிளை செயலாளர் திருவேங்கடம், மதிமுக கிளை செயலாளர் பூந்தை சேட்டு உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் திமுக முன்னோடிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா: துரை வைகோ மரியாதை appeared first on Dinakaran.

Tags : Durai Vaiko ,Ariyalur ,Madhyamik General Secretary ,Muthamil ,Geezakollathur, Thirumanoor Union ,Ariyalur District ,
× RELATED குடிப்பதை நிறுத்தினால் மதுவிலக்கு சாத்தியமாகும்: துரை வைகோ எம்பி பேட்டி