×

டி20 உலகக்கோப்பை: சூப்பர் ஓவரில் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது நமீபியா அணி

பார்படாஸ்: டி20 உலகக்கோப்பை தொடரில் ஓமனை வீழ்த்தி நமீபியா முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 9வது டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக் ஆட்டத்தில் ஓமன் – நமீபியா அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் எராஸ்மஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி நமீபியா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து 110 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியாவும் 109 ரன்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.

இதனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்கு சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் நமீபியா முதலில் பேட்டிங் செய்தது. ஓமன் தரப்பில் சூப்பர் ஓவரை பிலால் கான் வீசினார். அதனை எதிர்கொண்ட நமீபியா அதிரடியாக விளையாடி ஒரு சிக்ஸ் 3 பவுண்டரிகள் உட்பட 21 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 22 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பரபரப்பான சூழலில் களமிறங்கிய ஓமன் வெறும் 10 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் பரபரப்பாக நடைபெற்ற இந்த சூப்பர் ஓவரில் ஓமனை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபியா வெற்றி பெற்றது.

The post டி20 உலகக்கோப்பை: சூப்பர் ஓவரில் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது நமீபியா அணி appeared first on Dinakaran.

Tags : T20 World Cup ,Namibia ,Oman ,Super ,Barbados ,9th T20 World Cup ,Super Over ,Dinakaran ,
× RELATED டி20 உலகக்கோப்பை லீக்போட்டி: நமீபியாவை...