×

அரசுக்கு ரூ1.38 கோடி வருவாய் இழப்பு: நெடுஞ்சாலைத் துறை அதிகாரி, ஒப்பந்த நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு

மதுரை: கமிஷன் பெற்று, ஒப்பந்தம் வழங்கி, அரசுக்கு ரூ.1.38 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக, தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணைய துணை பொதுமேலாளர் மற்றும் ஒப்பந்த நிறுவனங்கள் மீது சிபிஐ போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை(என்ஹெச் 49) மற்றும் தஞ்சை-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் (என்ஹெச் 229) கடந்த 2014 முதல் 2017ம் ஆண்டு வரை பணிகள் நடந்தன. இந்த பணிகளுக்கான ஒப்பந்த நடவடிக்கைகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆணையம், தெலங்கானாவை சேர்ந்த கே.என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன், சென்னையை சேர்ந்த காயத்ரி எஸ்பிஎல் நிறுவனம் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு பணிகளுக்கான ஒப்பந்தங்களை கொடுத்தது. பணிகளுக்கான மொத்த ஒதுக்கீட்டு தொகையில், 5 சதவீதத்தை கமிஷனாக தர வேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக அப்போதே புகார்கள் எழுந்தன. இந்த புகார்களின் அடிப்படையில் வழக்குப்பதிந்து சிபிஐ போலீசார், விசாரணை நடத்தி வந்தனர்.இந்நிலையில், இந்த பணிகளுக்கு 5 சதவீத கமிஷன் பெற்று, அனுமதி கொடுத்ததால், அரசுக்கு ஒரு கோடியே 38 லட்சத்து 90 ஆயிரம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அரசுக்கு இப்பெருந்தொகை இழப்பீட்டை ஏற்படுத்தியதாக, தேசிய நெடுஞ்சாலை துணை பொதுமேலாளர் முத்துடையார் மீதும் மற்றும் ஒப்பந்த நிறுவனங்களான தெலங்கானாவை சேர்ந்த கே.என்.ஆர்.கன்ஸ்ட்ரக்சன், சென்னையை சேர்ந்த காயத்ரி எஸ்பிஎல் நிறுவனத்தை சேர்ந்த 4 பேர் மீதும், 4 பிரிவுகளின் கீழ் சிபிஐ போலீசார் தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது. …

The post அரசுக்கு ரூ1.38 கோடி வருவாய் இழப்பு: நெடுஞ்சாலைத் துறை அதிகாரி, ஒப்பந்த நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு appeared first on Dinakaran.

Tags : CPI ,MADURAI ,NATIONAL HIGHWAY DEPARTMENT COMMISSION ,NHA ,Dinakaraan ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை