×

தேசிய தரவரிசை டென்னிஸ் திருச்சி வீரர்கள் சாதனை

 

திருச்சி, ஜூன் 3: தேசிய தரவரிசை டென்னிஸ் போட்டிகளில் திருச்சி வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். கோவை லீவோ டென்னிஸ் அகாடமியில் ஏஐடிஏ தர வரிசைக்கான டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றது. தேசிய அளவிலான இப்போட்டியில் 12 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு போட்டிகளில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் திருச்சியை சேர்ந்த சித்தார்த் ஆனந்த் முதலிடம் பிடித்தார். இரட்டையர் பிரிவில் அனிருத்வேல் அவினாஷ் மற்றும் சித்தார்த் ஆனந்த் ஆகியோர் முதலிடல் பிடித்தனர். முதலிடம் பிடித்த வீரர்களை திருச்சி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் அகாடமி நிர்வாகிகள் பாராட்டினர்.

The post தேசிய தரவரிசை டென்னிஸ் திருச்சி வீரர்கள் சாதனை appeared first on Dinakaran.

Tags : AITA ,Levo Tennis Academy ,Coimbatore ,Dinakaran ,
× RELATED மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில பெண் மீட்பு