×

சேலத்தில் 98.8 டிகிரி வெயில்

 

சேலம், ஜூன் 3: சேலத்தில் நேற்று 98.8டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலை பதிவானது. தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாக 98 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகி வருகிறது. தற்போது, கோடை மழை பெய்து வருவதால், நேற்று முன்தினம் 98.1டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பம் பதிவானது. நேற்று 98.8டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

வெப்ப நிலை அதிகரித்து வருவதால், மதிய நேரங்களில் முக்கிய கடைவீதிகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. வெயிலின் தாக்கம் காரணமாக, சேலத்தில் பழச்சாறு கடைகள், தர்பூசணி கடைகள், இளநீர் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதிகப்படியான உஷ்ணத்தால் உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறி, விரைவிலேயே களைப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க மக்கள் பழச்சாறு, இளநீர் குடித்து தாக்கத்தை தணித்து வருகின்றனர்.

The post சேலத்தில் 98.8 டிகிரி வெயில் appeared first on Dinakaran.

Tags : Salem ,Agni Nakshatra ,Tamil Nadu ,
× RELATED தஞ்சாவூர் ரயில்வே கீழ்பாலத்தில்...