×

இஸ்ரேலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்

 

பெரம்பலூர், ஜூன் 3: பெரம்பலூரில் இஸ்ரேலைக் கண்டித்து மார்க்.கம்யூ.கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்டு காந்திசிலை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று காலை 10.45 மணிக்கு நடைபெற்றது.

பாலஸ்தீன மக்கள் மீது இனப்படு கொலையை நடத்தி வரும் இஸ்ரேல் மற்றும் அதற்கு துணை போகும் அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளை கண்டித்தும், போரை நிறுத்தக் கோரியும் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ரமேஷ் தலைமை வகித் தார். பட்டிமன்ற நடுவர் எட்வின் கலந்துகொண்டு சிறப்புரை பேசினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பலரும் கலந்து கொண்டு இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக கண்டன கோஷமிட்டனர்.

The post இஸ்ரேலை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Marxist Communism ,Israel ,Perambalur ,Mark.Com ,Marxist Communist Party ,Gandhisil ,Dinakaran ,
× RELATED மார்க்சிஸ்ட் கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்