×

சின்னமனூர் அருகே புகையிலை பதுக்கிய கடைக்கு சீல்

சின்னமனூர், ஜூன் 3: சின்னமனூர் அருகே குச்சனூர் பேரூராட்சி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா உள்ளிட்டவை அதிகம் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில், சின்னமனூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சுரேஷ்கண்ணன் அப்பகுதிகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் சின்னமனூர் போலீசார் உதவியுடன், குச்சனூர் பேரூராட்சி பகுதியில் உள்ள 20க்கும் மேற்பட்ட பெட்டிக்கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது சில கடைகளில் குறைந்த அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த கடைக்காரர்களுக்கு அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கிடையே, ஒரு கடையில் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த புகையிலை பொருட்கள் சிக்கியது. இதையடுத்து அந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்ததுடன், கடையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர்.

 

The post சின்னமனூர் அருகே புகையிலை பதுக்கிய கடைக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,Kuchanur ,Collector Uttara ,Chinnamanur District ,Food ,Safety Officer ,Dinakaran ,
× RELATED கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு