×

பூங்கா சாலையோர கால்வாயில் குவிந்திருந்த மண், கழிவுகள் அகற்றம்: மசினக்குடியில் அவசர ஆலோசனை

 

ஊட்டி,ஜூன்3: ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையோர கால்வாய்களில் குவிந்திருந்த மண் மற்றும் கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று முன்தினம் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு கனமழை கொட்டியது. கனமழை காரணமாக ஊட்டி ரயில் நிலையம் அருகே கூட்ெஷட் பகுதி, படகு இல்ல சாலை, சேரிங்கிராஸ், பூங்கா சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே என பல்வேறு தாழ்வான இடங்களிலும் மழைநீர் சூழ்ந்தது.

இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.இந்நிலையில் மழைநீர் தேங்கி இருந்த இடங்களில் ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையோரத்தில் உள்ள சிறு சிறு கால்வாயில் குவிந்து இருந்த மண் மற்றும் கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி தூய்மைப்படுத்தினர்.இதேபோல் ஊட்டி நகரின் பல்வேறு பகுதிகளிலும் கழிவுநீர் கால்வாய்கள் மண் குவிந்து காட்சியளிக்கின்றன. இவற்றையும் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

The post பூங்கா சாலையோர கால்வாயில் குவிந்திருந்த மண், கழிவுகள் அகற்றம்: மசினக்குடியில் அவசர ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Masinakudi ,Ooty ,Ooty Botanical Garden ,Nilgiris district ,Ooty railway station ,Dinakaran ,
× RELATED 2வது சீசனுக்காக தாவரவியல் பூங்காவில்...