×

ஸ்கூல் பேக், ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை ஜோர்

 

கோவை, ஜூன் 3: கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்தும் வரும் 10-ம் தேதி திறக்கப்படுகிறது. கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், பெரியகடை வீதியில் பள்ளி மாணவர்களுக்கான ஸ்கூல் பேக், வாட்டர் கேன், எழுது பொருட்கள், புத்தகங்கள், சீருடை போன்றவற்றின் விற்பனை சூடுபிடித்துள்ளது. குழந்தைகளை கவரும் வகையிலான சோட்ட பீம், ஸ்பைடர் மேன், ஆங்கிரி பேர்ட்ஸ் உள்ளிட்ட கார்ட்டூன் கதாபாத்திரங்களை மையப்படுத்தி பல ஸ்கூல் பேக் பல வண்ணங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஸ்கூல் பேக் ரூ.150 முதல் அதிகபட்சம் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், குழந்தைகளுக்கு தேவையான பேனா, பென்சில், ரப்பர், நோட்டுகள், வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ், லஞ்ச் பேக் போன்றவை கடை வீதிகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தவிர, சாலையோரத்தில் குழந்தைகளுக்கான ஷூ, செருப்பு போன்றவையும் குவியல், குவியலாக வைத்து விற்பனை செய்யப்பட்டது. இதனை வாங்க குழந்தைகளுடன் கடைவீதியில் குவிந்த பெற்றோர் ஆர்வம் காட்டினர்.

The post ஸ்கூல் பேக், ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை ஜோர் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Periyakadai road ,
× RELATED 1.5 கிராம் உயர்ரக போதை பொருள் பறிமுதல்