×

தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது

 

கோவை, ஜூன் 3: கோவை வடவள்ளி குருசாமி நகர் நவாவூர் பிரிவை சேர்ந்தவர் குணசேகரன் (62). இவர் மகன் அரவிந்த் (30). டிரைவர். இவருக்கு மது போதை பழக்கம் உள்ளது. அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. இதனை குணசேகரன் கண்டித்தார். ஆனாலும் அரவிந்த் மது குடிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இது தொடர்பாக தந்தை, மகன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அரவிந்த் வீட்டில் இருந்த அரிவாளால் குணசேகரனை வெட்டினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். வடவள்ளி போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அரவிந்தை கைது செய்தனர்.

The post தந்தையை அரிவாளால் வெட்டிய மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Gunasekaran ,Navavur ,Vadavalli Kuruswamy Nagar, Coimbatore ,Arvind ,Dinakaran ,
× RELATED 1.5 கிராம் உயர்ரக போதை பொருள் பறிமுதல்