×

வடமதுரை அருகே கழுமரம் ஏறியவர் மூச்சுத்திணறி பலி

வடமதுரை, ஜூன் 3: வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் கழுமரம் ஏறியவர் மூச்சுத்திணறி பலியானார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே சாணார்பட்டி யூனியன் கம்பிளியம்பட்டியில் முத்தாலம்மன், பகவதியம்மன், காளியம்மன், மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி கழுமரம் ஏறும் போட்டி இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்றது.

இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் 60 அடி உயர மரத்தில் போட்டி போட்டு ஏறினர். அப்போது பொத்தகனவாய்பட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி (30) என்பவர் கழுமரம் ஏறினார். அவரால் ஏற முடியாததால் ஏறுபவர்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே சுப்பிரமணி உயிரிழந்தார். இதுகுறித்து வடமதுரை போலீசார் நேற்று முன் தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வடமதுரை அருகே கழுமரம் ஏறியவர் மூச்சுத்திணறி பலி appeared first on Dinakaran.

Tags : Vadamadurai ,festival of Muthalamman ,Bhagavatiyamman ,Kaliyamman ,Mariyamman ,Chanarpatti Union Kampliampatti ,Vadamadurai, Dindigul district ,
× RELATED வடமதுரை காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்