×

விளையாட்டு பொருட்கள் விற்பனையகத்தில் தீவிபத்து

 

அம்பத்தூர், ஜூன் 3: அம்பத்தூர் தொலைபேசி இணைப்பகம் அருகில் சி.டி.எச் சாலையையொட்டி யுவராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான விளையாட்டு பொருள்கள் விற்பனை நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த விற்பனை நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கிருந்த அனைத்துப் பொருள்களும் கொழுந்து விட்டு எரிந்தன. மேலும், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் சிடிஎச் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள், 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அங்கிருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அருகில் இருந்த திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்ததில் தீப்பொறி பட்டு கடையில் தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விளையாட்டு பொருட்கள் விற்பனையகத்தில் தீவிபத்து appeared first on Dinakaran.

Tags : Ampathur ,Yuvrajkumar ,CDH Road ,Ampathur Telephone Exchange ,Dinakaran ,
× RELATED மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயண...