×

ஊத்துக்கோட்டை பேரூராட்சி விரிவாக்கம்? வாட்ஸ் அப் செய்திக்கு அதிகாரிகள் விளக்கம்

 

ஊத்துக்கோட்டை, ஜூன் 3: ஊத்துக்கோட்டை பேரூராட்சி விரிவாக்கம் செய்வது குறித்து வாட்ஸ் அப்பில் உலா வந்த தகவலுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பேரூராட்சியில் 10,640 வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி விரிவாக்கம் செய்யப்படுகிறது.

இதற்காக பூண்டி ஒன்றியத்தில் உள்ள அனந்தேரி, பேரிட்டிவாக்கம், போந்தவாக்கம், நந்திமங்கலம், புதுச்சேரி, காசிரெட்டி பேட்டை மற்றும் எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள பால்ரெட்டி கண்டிகை, ஆலங்காடு, தாராட்சி, தொம்பரம்பேடு, தாமரைக்குப்பம், செஞ்சியகரம், பேரண்டூர் ஆகிய 13 கிராமங்கள் ஊத்துக்கோட்டை பேரூராட்சியுடன் இணைக்கப்படுகிறது.

இதேபோல் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 2 ஊராட்சிகளும், பள்ளிப்பட்டு பேரூராட்சியில் 4 ஊராட்சிகளும், பொதட்டூர் பேட்டை பேரூராட்சியில் 6 ஊராட்சிகளும், திருமழிசை பேரூராட்சியில் 5 ஊராட்சிகளும், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 13 ஊராட்சிகளும் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது என வாட்ஸ்அப்பில் தகவல் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, தமிழக அரசு பேரூராட்சியில் கூடுதலாக ஊராட்சிகளை சேர்க்க ஒரு பட்டியலை கேட்டுள்ளது. அதன் அடிப்படையில் மேற்படி பட்டியலை அனுப்பியுள்ளோம் என கூறினர்.

The post ஊத்துக்கோட்டை பேரூராட்சி விரிவாக்கம்? வாட்ஸ் அப் செய்திக்கு அதிகாரிகள் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Uthukottai Municipality ,WhatsApp ,Oothukottai ,Uthukottai ,Oothukottai Municipality ,
× RELATED ரோடு, பாலங்களில் பைக் ரேஸ், ரீல்ஸ்