×

திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

 

திருத்தணி, ஜூன் 3: கோடை விடுமுறை முடிந்து அடுத்த வாரம் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் குவிந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருத்தணி முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறப்பு பெற்றது. இக் கோயிலுக்கு தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடக உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை தரிசித்து செல்கின்றனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து அடுத்த வாரம் (ஜூன் 10ல்) திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைப்பாதையில் வாகனங்களில், படிகள் வழியாக மலைக் கோயில் வந்தடைந்தனர். இதனால், கோயில் மாட வீதிகளில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

இலவச தரிசன வழி மற்றும் ரூ.100 சிறப்பு தரிசன வழிகளில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணிநேரம் காத்திருந்து முருகப்பெருமானை தரிசித்து கோயில் உண்டியல்களில் காணிக்கை செலுத்தினர். காலை முதல் மாலை வரை கோயிலில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், அன்னதானம் வழங்கப்பட்டு தடையின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

The post திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tiruthani Murugan Temple ,Tiruthani ,Thiruthani Murugan Temple ,Sami ,Lord ,Muruga ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் ஆந்திர அமைச்சர் ரோஜா சாமி தரிசனம்