×

மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டண விலக்கு: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம், ஜூன் 3: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மாற்றுத்திறனாளிகள் நல சட்டத்தின்படி மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்லூரி சேர்க்கை பெறுவதில் பின் தள்ளப்படுவதாகவும், அவர்களது உரிமைகளை மறுக்கப்படுவதாகவும், இவைகளை களைந்து கல்வி பயில்வதில் கல்வி உரிமைகளை 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் சம அளவில் கிடைக்க பெறச்செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயர்க் கல்வி பயில விரும்பும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்கள் பயனடையும் வகையில் கீழ் குறிப்பிட்டுள்ள கல்லூரிகளில் கட்டண விலக்கு பெற்று பயனடையலாம். மேலும், விவரங்களுக்கு காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை 044-2999 8040 என்ற தொலை பேசி எண்ணில் தொடர் கொண்டு விவரங்களை பெறலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர்களுக்கு கட்டண விலக்கு: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipuram District ,Collector ,Kalachelvi Mohan ,Dinakaran ,
× RELATED இன்னுயிர் காப்போம் திட்டம் மூலம் ரூ.3.80...